தளபதி விஜய் நடிப்பில் XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 25 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13 அன்று பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரும்வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல் தற்போது யூட்யூபில் 25 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இதுவரை மொத்தம் 26 லட்சம் பேர் இந்தப் பாடலுக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த பாடலுக்கு இசை அனிருத். கானா பாலச்சந்தர் இந்த பாடலை எழுதியிருந்தார். அனிருத், கானா பாலச்சந்தர் இருவரும் இந்த பாடலை பாடியிருந்தனர்.