புதுமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஓ மை கடவுளே’. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடவுளாக கவுரவ வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்து நல்ல கமர்ஷியல் படமாக வெளியான இதை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்படம் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.

இதன் தெலுங்கு பதிப்பையும் அஷ்வத் மாரிமுத்து தான் இயக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த கடவுள் கதாபாத்திரதில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இதன் ஹிந்தி வெர்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்க ஷாலினி பாண்டே, மீஸான் ஜாஃப்ரி ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த தகவலில் உண்மையில்லை என அவரவர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் ஹிந்தி வெர்ஷனுக்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் தான் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விரைவில் நடிகர்கள் மற்றும் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.