சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் தமிழ்,தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்தியில் க்ரிதி சானொன் மற்றும் பங்கஜ் திரிபாதி நடிப்பில் லட்சுமன் உர்டேக்கர் இயக்கத்தில் வெளியான மிமி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. அந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்ற பரம் சுந்தரி பாடல் தான் தற்போதைய சென்ஸேஷன்.
இந்தப் படத்திற்காக க்ரீத்தி சனோனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்தப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களைச் சம்பாதித்துக் கொண்டார் க்ரீத்தி. மிமி திரைப்படம் 2011-ம் ஆண்டு மராத்தியில் வெளியான மலா ஆய் ஹய்ச்சி என்ற படத்தின் இந்தி ரீமேக் தான்.
மிமி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அந்தப் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் கீர்த்தி ரீமேக்கில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.