விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இன்று நடிகர் விஷால் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் விஷால் து.பா.சரவணன் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தில் பர்ஸ்ட் லுக்போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு வீரமே வாகை சூடும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை விஷாலின் சொந்த நிறுவனமாக வி.எப்.எப் நிறுவனம் தயாரித்து வருகிறது.