V4UMEDIA
HomeNewsKollywoodஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட ‘கசட தபற’

ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட ‘கசட தபற’

ஓடிடி தளத்தில் வெளியான கசட தபற திரைப்படம் தயாரிப்பு நிறுவனம் உடனான சிக்கல் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.

வைகைப் புயல் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிம்புதேவன். அதனைத் தொடர்ந்து இவர் அறை எண் 305-ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி ஆகிய படங்களை இயக்கினார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், சுந்தீப் கிஷன், ஷாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா, பிரேம்ஜி அமரன் போன்றோர் நடித்த கசட தபற என்கிற படத்தை இயக்கியுள்ளார் சிம்பு தேவன். 6 கதைக்களங்கள் கொண்ட இந்தத் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சிஎஸ், பிரேம்ஜி, சீன் ரோல்டன் என ஆறு இசையமைப்பாளர் இசையமைத்துள்ளனர்.

அதேபோல ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு படத்தொகுப்பாளர்களும் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள். ஆறு கதைகள் கொண்ட படமாக கசடதபற உருவாகியுள்ளது.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் தயாரிப்பு நிறுவனம் ஏசிஎஸ் நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை தராமல் இருந்ததாகக் கூறி அந்நிறுவனத்தினர் உயர்நீதிமன்றத்தில் கசட தபற திரைப்படத்திற்கு எதிராக தடை வாங்கியுள்ளனர். இதன்காரணமாக இன்று சோனி ஓடிடி தளத்தில் வெளியான கசட தபற திரைப்படம் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டது. எனினும் இந்த சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Most Popular

Recent Comments