நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. .
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். தற்போது அது உறுதியாகியுள்ளது.
அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு மைக்கேல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையில் ரத்தக்கறை மற்றும் விலங்குடன் உள்ள மிரட்டல் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்த, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகக் கூடிய பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. ‘பேமிலி மேன்’ சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே கூட்டணி இந்தப் படத்தை வெளியிட உள்ளனர். சௌத்ரி என்பவர் தயாரிக்கிறார். இந்த படம் ஆக்ஷன் என்டென்டெயினராக உருவாகிறது. படம் அக்டோபர் முதல் தொடங்க உள்ளது” என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘குல்லி ரவுடி’ என்ற தெலுங்கு படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார்.