ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் தற்போது ‘ருத்ரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை பொல்லாதவன்’, ‘ஜிகர்த்ண்டா’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் சரத்குமார் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ருத்ரன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் லாரன்ஸ் மாஸ் லுக்கில் காணப்படுகிறார்.
லாரன்ஸின் காஞ்சனா சீரிஸ் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இந்தப் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.