V4UMEDIA
HomeNewsKollywoodபொன்னியின் செல்வன் படத்தில் தனது கேரக்டரை முதன்முறையாக வெளிபடுத்திய நடிகர்.கார்த்தி!

பொன்னியின் செல்வன் படத்தில் தனது கேரக்டரை முதன்முறையாக வெளிபடுத்திய நடிகர்.கார்த்தி!

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வந்த நடிகர் ஜெயம் ரவி எனக்கு ஷூட்டிங் முடிந்தது என்று டிவிட் செய்தார் .

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படபிடிப்பு குவாலியர் கோட்டையில் நடந்து வருகிறது. படத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளார்கள்.

இன்று, பொன்னியின் செல்வன் ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ஜெயம் ரவி, “பொன்னியின் செல்வன் இரண்டு பாகத்திற்கான எனது படபிடிப்பை முடித்துவிட்டேன். மணி ( மணிரத்தினம் ) சாரின் காமடி சென்சும், என் மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு பார்த்துக் கொண்டதையும், மீண்டும் உங்களுடன் பணிபுரியும் வரை நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன். இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்”.. என்று ஜெயம் ரவி டிவிட் செய்துள்ளார்.

இதை படித்த கார்த்தி,

“இளவரசே @actor_jayamravi நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது 😁

இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம்.

  • வந்தியத்தேவன்🐎🐎 ” என்று கார்த்தி டிவிட் செய்து , பொன்னியின் செல்வன் படத்தில் தனது கேரக்டர் வந்தியதேவன் என்பதை உறுதி செய்துள்ளார்.

இப்படி கார்த்தி டிவிட் செய்ததை ரசிகர்கள் ரசித்து கொண்டாடுகிறார்கள்.

Most Popular

Recent Comments