தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை நீக்கியது.நடிகர் சிம்பு படப்பிடிப்புகளில் சரியாக கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுவதாக அவரின் கடந்தகால வாழ்க்கையில் புகார்கள் எழுந்தன. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
ஆனால் நடிகர் சிம்புவின் நடவடிக்கையால் நான்கு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரின் படங்களுக்கு பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது எனவும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பெப்சி அறிவித்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் பெப்சி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இது கௌதம் மேனன் சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படம். இதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிலம்பரசனின் தாய் உஷா, மகனின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் இப்படி செய்வதாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை நீக்கியது .’வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு பெப்சி தொழிலாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவித்துள்ளது. படப்பிடிப்பில் சரிவர கலந்து கொள்ளாததால் நஷ்டம் அடைந்ததாக மைக்கேல் ராயப்பன் வழக்குத்தொடர்ந்த நிலையில் அது நீதிமன்றத்தில் இருப்பதால் அங்கே முடிவு செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.