நடிகர் பசுபதி ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக கணக்கு துவங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் பசுபதி. பன்முக திறமைக்கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். பசுபதி கடைசியாக பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா’ திரைப்படத்தில் ரங்கன் வாத்தியர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
மேலும் வாத்தியாரே மீம்ஸ்கள் அவரை மேலும் பிரபலமாக்கியது. இந்நிலையில் அவர் பெயரில் ட்விட்டரில் பல கணக்குகள் துவங்கப்பட்டன. பலர் அதை உண்மை என நம்பி அதில் வரும் பதிவுகளையும் ஷேர் செய்யவும் துவங்கிவிட்டனர்.

பின்னர் நான் எந்த சோசியல் மீடியாவிலும் இல்லை என்றும், தன்னுடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உஷாராக இருங்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பசுபதி ட்விட்டரில் அதிகாரபூர்வமாக கணக்கு துவங்கியுள்ளார். தன்னுடைய வாத்தியாரின் ட்விட்டர் கணக்கை பகிர்ந்துள்ள கபிலன் “வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே. குத்துச்சண்டைய விட ரத்த பூமி. உன்னோட பேருல இங்க நெறய பெரு இருக்காங்கனு தெரிஞ்சதும் ஒரிஜினல் நாதாண்ட னு உள்ள வந்த பாத்தியா. உன் மனசே மனசு தான். வா வாத்தியாரே இந்த உலகத்துக்குள்ள போலாம்” என்று தெரிவித்துள்ளார்.