V4UMEDIA
HomeNewsKollywoodமுதன் முறையாக இணையும் 'குக் வித் கோமாளி' பிரபலங்கள் அஸ்வின் - ஷிவாங்கி!

முதன் முறையாக இணையும் ‘குக் வித் கோமாளி’ பிரபலங்கள் அஸ்வின் – ஷிவாங்கி!

குக் வித் கோமோளி பிரபலங்கள் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இணைந்து சித்து குமார் இசையில் அடி பொலி என்ற பாடலில் பணியாற்றவுள்னளனர். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மக்கள் மட்டும் அல்ல பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பங்கேற்பாளர்களைப் பாராட்டிச் சென்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட பாடகி ஷிவாங்கி, ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்.

தர்ஷா குப்தா தற்போது ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அனைவரின் மனதையும் கவர்ந்த சின்னத்திரை நடிகர் அஸ்வின், ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஸ்வினுடன் புகழும் இணைந்து நடிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அஸ்வினை ஷிவாங்கி நேசிப்பதாகக் காட்டிக்கொண்டார். இருவரும் இணைந்து சமையல் செய்யும் காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. அஸ்வின் நடித்த ‘காதல் ஒன்று கண்டேன்’ குறும்படத்தில் இருந்து ‘கண்ண வீசி’ என்ற பாடலை நிகழ்ச்சியில் ஷிவாங்கி பாடியது பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் அவர்களின் ஆசை நிறைவேறியுள்ளது.  

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ பட இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் ஷிவாங்கி ‘அடி பொலி’ என்ற பாடலைப் பாடியுள்ளார். கண்ண வீசி என்ற பாடலுக்கு சித்து குமார் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலில் நடிகர் அஸ்வின், மற்றும் குஷி ரவி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த செய்தி அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓனம் பண்டிகையை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

Most Popular

Recent Comments