நடிகர்கள் கார்த்தி, பிரகாஷ் ராஜ், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் மணிரத்னம் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் ஓர்ச்சாவில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர்கள் கார்த்தி, பிரகாஷ்ராஜ், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பின்போது நடிகர் பிரகாஷ் ராஜிற்கு கையில் அடிப்பட்டு, அறுவைச் சிகிச்சை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.