பிரபல விஜேஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
90ஸ் பிரபல விஜேவாக வலம்வந்தவர் ஆனந்த கண்ணன். சன் மியூசிக்கில் பிரபல தொகுப்பாளராக இருந்த இவர் 90ஸ் கிட்களின் பேவரைட் . அத்துடன் சித்துபாத் உள்ளிட்ட சீரியல்கள், திரைப்படங்கள் என நடித்துள்ளார். அதன்பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என எங்கும் ஆனந்த கண்ணனை பார்க்க முடியவில்லை.
இந்த சூழலில் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறை, சின்னத்திரை ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனந்த கண்ணன் மறைவிற்கு இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.