Home News Kollywood முத்தையா இயக்கத்தில் இணையும் கார்த்தி?

முத்தையா இயக்கத்தில் இணையும் கார்த்தி?

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படம் விரைவில் துவங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் கடைசியாக ‘சுல்தான்’ திரைப்படம் வெளியானது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். அதில் முக்கியக் கதாபாத்திரமான வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ‘இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். கார்த்தி அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.

இயக்குனர் முத்தையா உடன் கார்த்தி  மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தோம். ‘கொம்பன்’ படத்தை அடுத்து  இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணையவிருக்கிறது. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சூர்யா தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தை முடித்தவுடன் முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளாராம்.