சென்னையில் 24வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும், டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கும் விற்பனையானது. கடந்த 24 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில், இன்றும் அதன் விலை மாற்றப்படவில்லை.
ccதினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.