தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சை நாயகியாக வலம்வருகிறார் மீரா மிதுன்.கோலிவுட்டின் உச்ச நடிகர்களான விஜய், சூர்யா, நயன்தாரா, ரம்யா பாண்டியன், பிரியா ஆனந்த் ஆகியோரையும் இவர் தரக்குறைவாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.
தற்போது தலித் சமூகத்தை மிகவும் இழிவாகப் பேசி இவர் பேசிய வீடியோ வைரலானதையடுத்து புது சர்ச்சை கிளம்பியுள்ளது. தனது காதலன் சாம் உடன் இணைந்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், தலித் சமூகத்தைச் சார்ந்த இயக்குநர்கள், நடிகைகள் தான் தன்னுடைய முகத்தைப் பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்த வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் சாதி வன்மத்துடன் பேசி வரும் நடிகை மீரா மிதுன் மீது வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நடிகை மீரா மிதுனை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி
திராவிடர் விடுதலை கழகத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மா.பா.மணி அமுதன் காவல்துறையில் புகார் மனு அளித்தார்.


























