V4UMEDIA
HomeNewsKollywoodஅறுவை சிகிச்சைக்குப் பிறகு அர்ச்சனா வெளியிட்டுள்ள பதிவு!

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அர்ச்சனா வெளியிட்டுள்ள பதிவு!

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அர்ச்சனா தற்போது புதிதாக பதிவிட்டுள்ளார். 

சின்னத்திரையில்விஜே அர்ச்சனா தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர். பல முன்னணித் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றிய அவர்  பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதையடுத்து மேலும் மக்களிடம் மிகவும் நெருக்கமானார். தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் விஜே அர்ச்சனா மூளையில் பாதிப்பு காரணமாக சில தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்து வீடு திரும்பினார். அவர் வீல்சேரில் வீடு திரும்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தான் வீடு திரும்பியதை வீடியோவாக எடுத்து அதை யூடியூபிலும் பதிவேற்றிஇருந்தார்.

தற்போது அர்ச்சனா அறுவை சிகிச்சை முடிந்து 20 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு அறுவை சிகிச்சை உங்களை மிகவும் பாதித்த போதும் கூட உங்கள் மகள் உங்களைப் பார்த்து நீங்கள் ஒரு ராக்ஸ்டார் அம்மா என்று கூறும் தருணம். உங்களிடம் உள்ளகெட்ட சக்தியைக் கொண்டு உங்கள் வலியை முறியடியுங்கள். அப்போது நீங்கள் பாதுகாப்பாக நலமடைந்து வருவதாக நீங்கள் உணர முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

Most Popular

Recent Comments