நடிகர் தளபதி விஜய்க்கு அவரது மக்கள் இயக்க உறுப்பினர்கள் இணைந்து சிலை வைத்துள்ளனர்.
நேற்று நடிகர் விஜய்யின் சென்னை அலுவலகத்திற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் வந்தனர். விழுப்புரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து ( EX MLA ) தலைமையில் கர்நாடக மாநில விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜயின் முழு உருவ சிலை வைத்து திறக்கப்பட்டது .இந்த சிலை பனையூர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டாடி வருகின்றனர். விஜய்க்கு சிலை வைப்பது புதிதல்ல. ‘மாஸ்டர்’ படம் வெளியான போது பெங்களூருவைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்தது குறிப்பிடத்தக்கது.