நடிகை யாஷிகா ஆனந்த் கார் கவிழ்ந்து விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மாமல்லபுரம் அருகே நள்ளிரவு 1 மணியளவில் அதிவேகமாக சென்ற போது சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அவருடன் பயணித்த மூவரில் மேலும் ஆண் நண்பர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

துரதிருஷ்டவசமாக யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகத் தெரிய வந்துள்ளது.