தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சினேகன். 700க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியராக படங்களில் நடித்தும் வருகிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்தின் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார்.

சினேகன் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்ய இருக்கிறார். கன்னிகாக தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இப்போது பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்ய இருக்கிறார்கள். இவர்கள் திருமணம் வருகிற 29ம் தேதி கமலஹாசன் தலைமையில் எளிமையாக நடக்கிறது.