விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘எனிமி’ படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது.
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளனர். நடிகை மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் தயாரிக்கிறார். மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எனிமி திரைப்படம் பெரிய பெட்ஜெட்டில் உருவாகியுள்ளது. எனவே படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தின் பாடல்களுக்கு எஸ். தமன் இசையமைக்கிறார். பின்னனி இசையை சாம் சிஎஸ் அமைத்துள்ளார்.
தற்போது எனிமி படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை(ஜூலை 24) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.