V4UMEDIA
HomeNewsKollywoodபழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் சூர்யா... ஜெய் பீம் பர்ஸ்ட் லுக்

பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் சூர்யா… ஜெய் பீம் பர்ஸ்ட் லுக்

சூர்யா 39  படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 39-வது படத்தில் நடித்து வருகிறார். சூர்யா இந்தப் படத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடிக்கிறார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. ‘கர்ணன்’ பட நடிகை இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இன்று சூர்யா பிறந்தநாளைக் கொண்டாடுவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா 39 படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ஜெய் பீம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அது சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் போஸ்டரில் சூர்யா வழக்கறிஞர் உடையில் காணப்படுகிறார். மேலும் பழங்குடியின மக்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளனர். இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் டைட்டில் மற்றும் இரண்டு போஸ்டர்களும் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

Recent Comments