விமல் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் விமல் நடிப்பில் கடைசியாக கன்னிராசி திரைப்படம் வெளியானது. அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. சமீபகாலமாக விமல் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் வரவேற்பை பெறத் தவறி வருகின்றன. இதனால் மீண்டும் சினிமாவில் தனது மார்க்கெட்டை உயர்த்த சிறந்த கதை உள்ள படங்களைடத் தேடி நடித்துவருகிறார். மேலும் புதிய இயக்குநர்களுடனும் கூட்டணி அமைத்து வருகிறார்.

அந்த வகையில் சண்டக்காரி, எங்க பாட்டன் சொத்து, மஞ்சள் குடை, குலசாமி, துடிகாரங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது விமல் புதிய படத்தில் போலீசாக நடித்து வருகிறார். ‘புரூஸ் லீ’ படத்தை இயக்கிய பிரசாத் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். அந்தப் படத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.