‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. டெக்கான் ஏர்வேஸ் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பு மற்றும் சுதா கொங்கராவின் இயக்கம் அபாரமாக. இருந்தது. படம் இந்தியா முழுவதும் பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியது. ஜிவி பிரகாஷ் இசையும் படத்திற்கு பெரிதும் பக்க பலமாக அமைந்தது.

இந்நிலையில் சூரரைப் போற்று படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகவும் அதை சுதா கொங்காரா இயங்குவதாகவும் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தி ரீமேக்கை சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜசேகர் மூவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

இந்நிலையில் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக முன்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது நடிகர் அக்ஷய் குமார் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அக்ஷய் குமார் ஏற்கனவே பல தமிழ் படங்களின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். துப்பாக்கி, காஞ்சானா உள்ளிட்ட படங்களின் ரீமேக்கில் நடித்துள்ளார். தற்போது ‘ராட்சசன்’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே அக்ஷய் கண்டிப்பாக சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.