V4UMEDIA
HomeNewsKollywoodமாறிய குஷ்புவின் பெயர் – ட்விட்டர் பக்கம் ஹேக்!

மாறிய குஷ்புவின் பெயர் – ட்விட்டர் பக்கம் ஹேக்!

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். சமூகத்தில் நிகழக்கூடிய சம்பவங்களுக்கு கருத்து தெரிவிப்பார். அதேபோல அரசியலில் தான் சார்ந்த கட்சியை யாராவது விமர்சித்தால் கொதித்தெழுந்து ட்வீட் போட்டு பதிலடி கொடுப்பார். நெட்டிசன்களும் அவரை வம்புக்கிழுப்பார்கள். அவர்களுக்கும் அதே பாணியில் பதில் தருவார்.

இச்சூழலில் அந்த ஐடிக்கே இப்போது பயங்கர அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. ஆம் அவர் போட்ட 1 லட்சத்து 59 ஆயிரம் ட்வீட்கள் மொத்தமாக மறைந்து போயுள்ளன. அதேபோல அவரது பெயருக்குப் பதிலாக Briann என்ற பெயர் இருக்கிறது. ஆனால் அவரின் username ஆன @khushsundar மட்டும் மாறாமல் இருக்கிறது. குஷ்புவை 13 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். 710 பேரை அவர் பின்தொடர்கிறார்.

இதனால் அவரது ட்விட்டர் ஐடி ஹேக் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Most Popular

Recent Comments