கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன் புதிய படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.
மலையாள நடிகை ரஜிஷா விஜயன், மாரிசெல்வராஜ் தனுஷ் கூட்டணியில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது தமிழில் பல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கூட்டத்தில் ஒருவன் இயக்குனர் டீஜே ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். அந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் தான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்திலும் ரஜிஷா விஜயன் தான் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் ரஜிஷா விஜயன் தற்போது தெலுங்கில் புதிய படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ‘ராமா ராவ் ஆன் டியூட்டி’ என்ற படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில் ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் ரஜிஷாவின் கதாபாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது. அந்தப் படத்திற்கான போட்டோஷூட்டிற்காக ரஜிஷா விஜயன் ஹைதராபாத் சென்றுள்ளதாகவும் போட்டோஷூட்டில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.