அதிக இன்ஸ்டாகிராம் பின் தொடர்பாளர்களை பெற்ற தென்னிந்திய நடிகைகளில் ராஷ்மிகா முதலிடம் பிடித்துள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அப்படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். இவர் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தற்போது தமிழில் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராமில் 1.92 கோடி பின் தொடர்பவர்களை பெற்று அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். காஜல் அகர்வால் 1.90 கோடி பின் தொடர்பவர்களையும், சமந்தா 1.75 கோடி பின் தொடர்பவர்களையும், ரகுல் பிரீத் சிங்1.72 கோடிக்கும் மேற்பட்ட பின் தொடர்பவர்களையும், ஸ்ருதிஹாசன் 1.70 கோடி பின் தொடர்பவர்களையும் கொண்டுள்ளனர்.