‘சூர்யா 40’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யா தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வந்தது. பின்னர் கொரோனாவால் முடங்கியது. தற்போது மீண்டும் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2021/07/E6ouqjpVIAA4rX2-1024x477.jpg)
இந்நிலையில் சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 23ம் தேதி சூர்யா பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் ஜுலை 22-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் சிறிய மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். அதில் சூர்யா இருட்டு அறைக்குள் கையில் சங்கிலியுடன் காணப்படுகிறார். பர்ஸ்ட் லுக் அறிவிப்பு வெளியானதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.