‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து அசத்தலான புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் தற்போது அமரர் கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை படமாக்கி வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா,ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சோபிதா துலிபாலா, அர்ஜுன் சிதம்பரம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, கிஷோர், ரகுமான் ஜெய ராம், லால், அஸ்வின் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். முதல் பாகத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக படத்திலிருந்து எந்தவொரு அப்டேட்-ம் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்திலிருந்து அசத்தலான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. போஸ்டரில் சோழர்களின் புலி சின்னம் பொறிக்கப்பட்ட வாள் மற்றும் கேடயம் இடம்பெற்றுள்ளது. போஸ்டர் பார்ப்பதற்கு மிரட்டலாக உள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது