கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் மெல்ல மெல்ல தொடங்க ஆரம்பித்துள்ளன. அதன்படி பீஸ்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதே ஸ்டூடியோவில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி, பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜயை சந்தித்துள்ளார். அப்போது கார்த்தி, சர்தார் படத்தில் வரும் வயதானவர் மேக் அப்பில் இருந்ததால், விஜயால் அவரை அடையாளம் காண முடியவில்லையாம். அதனால் கார்த்தியை யாரோ என நினைத்து விஜய் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
அதை புரிந்துகொண்டு நடிகர் கார்த்தி அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இன்ப அதிர்ச்சி அடைந்த விஜய், கார்த்தியின் மேக் அப்புக்கு வாழ்த்தும் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.