கவின் நடிப்பில் உருவாகி வரும் லிப்ட் படத்தின் இரண்டாம் பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
பிக்பாஸ் கவின் நடிப்பில் லிப்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. அந்தப் படத்தை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப்படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படத்திற்கு மைக்கேல் பிரிட்டோ இசையமைத்துள்ளார்.
லிப்ட் படத்திற்கு கோலிவுட்டில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. லிப்ட் படத்திலிருந்து வெளியான முதல் பாடலான ‘இன்னா மயிலு’ பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் பூவையார் இணைந்து பாடியிருந்தனர். அந்தப் பாடலுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.