நடிகை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதே நம் முன் இருக்கும் ஒரே தீர்வாக இருக்கிறது. எனவே அரசு தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

திரைத்துறைப் பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அந்தப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து மக்ளுடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் தங்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.