நடிகை ஷகீலா புதிய ஓடிடி தளம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.
தற்போது இந்தியாவில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. லாக்டவுன் காலம் ஓடிடி தளங்களுக்கு பொற்காலமாக அமைந்துள்ளது. எனவே நிறைய ஓடிடி தளங்கள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி ஓடிடி தளம் உருவாக்கப் படுகின்றன.
தற்போது நடிகை ஷகீலா தனது சொந்த ஓடிடி ஒன்றைத் துவங்கியுள்ளார். அதற்கு கே.ஆர் டிஜிட்டல் பிளெக்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்.

அந்தத் தளத்தில் வெளியாக இருக்கும் அடல்ட் மற்றும் ரொமான்டிக் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை ஷகீலா வெளியிட்டார். ஷகீலாவின் மகள் மிலா கதாநாயகியாக நடிக்கும் இரண்டு படங்களும் அந்த ஓடிடி-யில் வெளியாக இருக்கிறது. ரமேஷ் காவலி அந்தப் படங்களை இயக்கியுள்ளார்.
“ரமேஷ் கூறிய கதைகள் எனக்கு பிடித்திருந்தது. புதிய நடிகர்களுடன் இந்தப் படங்களை உருவாக்குகிறோம். இந்த இரண்டு படங்களிலும் என் மகள் மிலா கதாநாயகியாக நடிக்கிறார். கோவாவின் சில அழகான இடங்களில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம்” என்று நிகழ்ச்சியில் ஷகீலா கூறினார்.
“எங்கள் முந்தைய திரைப்படமான ‘லேடிஸ் நாட் அல்லோட் படத்திற்கு சென்சார் வாங்க முனைந்த போது நாங்கள் பல சிக்கல்களைச் சந்தித்தோம். இதுபோன்ற தடைகளைத் தடுக்க, நாங்கள் இப்போது எங்கள் சொந்த ஓடிடி தளத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளோம், இது பல புதியவர்களுக்கு ஒரு கட்டமாக இருக்கும்,” என்றும் ஷகீலா தெரிவித்துள்ளார்.