சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் அப்டேட் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வாடிவாசல் திரைப்படம் வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. அதில் ஜல்லிக்கட்டுக்கு முக்கிய இடம் உண்டு என்பது அனைவர்க்கும் தெரியும்.எனவே சூர்யா அதற்காக காளைகளுடன் தீவிரமாக பயிற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைவதற்காக காளைகளுடன் பயிற்சி எடுத்து வருகிறாராம்.

வாடிவாசல் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா பிறந்தநாள் அன்று கடந்த வருடன் வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நீண்ட நாட்களாக வாடிவாசல் படத்திலிருந்து எந்தவொரு அப்டேட்-ம் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
ஆம், வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் அப்டேட் வெளியாகியுள்ளது. “வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை 5:30’க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.” என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.