அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் ஹாஸ்டல் டீசர் வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ‘ஹாஸ்டல்’ என்ற படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.
போபோ சஷி என்பவர் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சதிஷ் மற்றும் கலக்கப் போவது யாரு யோகி, ரவி மரியா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கல்லூரி மாணவர்களின் ஹாஸ்டலில் நடக்கும் நகைச்சுவை கலாட்டாவாக படம் உருவாகியுள்ளது. தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரைப் பார்க்கும் போது படம் ஹாரர் காமெடி படமாக உருவாகியிருப்பதாகத் தெரிகிறது. படத்தில் நாசர், முனீஸ் காந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஆண்கள் ஹாஸ்டலுக்குள் ப்ரியா பவானி ஷங்கர் செல்லும் போது ஏற்படும் கலாட்டா தான் படத்தின் கதை என்று தெரிகிறது. மேலும் ட்ரைலர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.