ஆர்ஆர்ஆர் திரைப்படம் உருவாக்கப்பட்ட முறையை விளக்கும் வீடியோ ட்ரைலர் வெளியாகியுள்ளது.
பாகுபலியின் இமாலய வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வாயூரம் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது.

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை டிவிவி தானய்யா நிறுவனம் தயாரித்து வருகின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. லைகா நிறுவனம் தமிழில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.
ஆலியா பட், ஷ்ரேயா, அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்ஆர்ஆர்திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 13-ம் தேதி ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.