‘மண்டலா’ திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து யோகிபாபு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.
மடோன் அஸ்வின் என்பவர் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவான ‘மண்டேலா’ திரைப்படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அந்தப் படத்தில் டூலெட் படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமாரும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாட்டின் அரசியல் களத்தை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் நேர்த்தியாக அப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஜோக்கர் படத்தைப் போல சமூக அவலங்களை காமெடி கலந்து தெரிவிக்கும் வகையிலும் படம் இருந்தது.

மண்டேலா திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் யோகிபாபுவைப் புகழ்ந்தனர். யோகிபாபுவின் சினிமா கேரியரில் மைல்கல்லாக அமைந்தது மண்டேலா திரைப்படம். இந்நிலையில் மெண்டெலா திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து யோகிபாபு படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். அந்த விடீயோவை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மண்டேலா திரைப்படம் விஜய் டிவியில் நேரடியாக ஏப்ரல் 4-ம் தேதி ஒளிபரப்பாகியது. தற்போது மண்டேலா திரைப்படத்தை நெட்பிளிக்ஸிலும் பார்த்துக் கொள்ளலாம்.