வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது.
அஜித் ரசிகர்களின் இரண்டு வருடக் காத்திருப்பிற்கு பெரும் பரிசாக இரு தினங்களுக்கு முன்னர் வலிமை படத்திலிருந்து பல அப்டேட்கள் வெளியாகியது. ரசிகர்கள் திக்குமுக்காடும் வகையில் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், ஸ்பெஷல் போஸ்டர்கள் என போனி கபூர் அப்டேட் மேல் அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வலிமை மோஷன் போஸ்டர் வெளியானாலும் ரசிகர்கள் அதை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கினார்கள்.
தற்போது வலிமை மோஷன் போஸ்டர் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது. ஆம் வெளியான 2 நாட்களுக்குள் வலிமை மோஷன் போஸ்டருக்கு 10 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது. அதையடுத்து படத்திலிருந்து மேலும் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியது. அதில் அஜித் பைக்கில் அமர்ந்திருக்கிறார். பார்ப்பதற்கு போஸ்டர் வேற லெவலாக உள்ளது. அந்த போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.