இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் -நடிகை கீதா பாஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 1998ம் ஆண்டில் ஆஸி.,க்குஎதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் ஹர்பஜன்சிங். டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்,20-20 போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆனார்.
பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை திருமணம்செய்து கொண்ட பின்னர் சினிமா மீதான ஆர்வம் அதிகரித்து நடிகர் ஆனார். டிக்கிலோனா, பிரண்ட்ஷிப் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஹர்பஜன்சிங் – கீதா பாஸ்ரா தம்பதிக்கு முதல் குழந்தை பெண் குழந்தை இருக்கும் நிலையில் நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹர்பஜன்சிங் – கீதா பாஸ்ரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.