V4UMEDIA
HomeNewsபெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு…!!

பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு…!!

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 101.67 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 101.37 ரூபாய், டீசல் லிட்டர் 94.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 101.67 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ 94.39 ஆகவும் உள்ளது.

Most Popular

Recent Comments