நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நேற்று திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நயன்தாரா அருகில் இருந்து தந்தையை கவனித்து வருகிறார். இந்த தகவல் துபாயில் உள்ள நயன்தாராவின் சகோதரருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் கொச்சி திரும்பினார் என தகவல் வெளியாகி இருக்கிறது