V4UMEDIA
HomeNewsKollywoodகாஜல் அகர்வால், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

காஜல் அகர்வால், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

காஜல் அகர்வால், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோலிவுட்டின் முன்னணி பைனான்சியராக வலம் வருபவர் ரமேஷ் பி பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 8 புதிய படங்களை தயாரிக்க உள்ளார். அவற்றில் மூன்று படங்களில் பிரபுதேவா நடிக்கிறார்.  நயன்தாரா நடிப்பிலும் இரண்டு படங்கள் உருவாகவுள்ளது  குறிப்பிடத்தக்கது.

அதில் காஜல் அகர்வால் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லக்ஷ்மி ராய் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பல முன்னணி இயக்குநர்களுடன் உதவி, இணை இயக்குநராகப் பணியாற்றிய ராஜா சரவணன் என்பவர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ரவுடிபேபி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 

எல்லாக் குழந்தைகளும் தேவதைகள் அல்ல என்ற வரிகளுடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Most Popular

Recent Comments