குக் வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் நடிக்க இருக்கும் நடிகைகள் பெயர்கள் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் குமார் தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கூடுதல் சிறப்பு என்னவென்றால் அந்தப் படத்தில் விஜய் டிவி புகழும் நடிக்கிறார். அந்தப் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை ஹரிஹரன் என்பவர் இயக்குகிறார்.அந்தப் படத்திற்கு ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் கதாநாயகிகள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. இது ரொமான்டிக் படமாக உருவாக இருப்பதால் இப்படதிற்கு இரண்டு கதாநாயகிகளை நடிக்க வைக்க விரும்பினேன். தற்போது அவந்திகா மற்றும் தேஜு அஸ்வினி இருவரும் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர் என்று படத்தில் இயக்குனர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “முக்கோண காதல் கதைக்களம் கொண்ட படமாக உருவாக இருக்கிறது இப்படம். எனவே புதிதாக நடிகைகளை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் விரும்பினோம். அவந்திகா பெங்களூரைச் சேர்ந்தவர், மேலும் அவர் பல விளம்பரங்களையும் இசை வீடியோக்களிலும் நடித்துள்ளார். மறுபுறம், தேஜு சென்னையைச் சேர்ந்தவர். அவர் ஒரு மாடல் மற்றும் டான்ஸரும் கூட.