V4UMEDIA
HomeNewsபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..!!

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..!!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசு அதிகரித்து ரூ.101.37க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.

கேஸ் சிலிண்டர் மாதத்துக்கு ஒருமுறையும், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றம் செய்யப்படுகிறது. நாடுமுழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது.
இது கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 31 காசு அதிகரித்து ரூ.101.37க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 9 காசு உயர்ந்து ரூ.94.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Most Popular

Recent Comments