V4UMEDIA
HomeNewsலிங்குசாமியின் தெலுங்கு படம் ஜூலை 12ல் ஆரம்பம்!

லிங்குசாமியின் தெலுங்கு படம் ஜூலை 12ல் ஆரம்பம்!

சண்டக்கோழி 2 படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனியை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் உப்பெனா படத்தில் நடித்த கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு லூசிபர், திரிஷ்யம்-2 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments