V4UMEDIA
HomeNewsKollywoodதளபதி விஜயின் பிகில் படத்தைக் காண்பித்து அடிபட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்! கொண்டாடும் ரசிகர்கள்!

தளபதி விஜயின் பிகில் படத்தைக் காண்பித்து அடிபட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்! கொண்டாடும் ரசிகர்கள்!

விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் பிரபலமாகி வருகிறது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சசிவர்ஷன் என்ற 10 வயது சிறுவன் தனது மாமாவுடன் பைக்கில் வந்தபோது தூக்க கலக்கத்தில் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளான். சிறுவன் பைக்கிலிருந்து கீழே விழுந்துள்ளார். எனவே சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர்.

அவனுக்கு பல இடங்களில் அடிபட்டதால் தையல் போட வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் சிறுவனோ ஊசி வேண்டாம் என்று அடம் பிடித்துள்ளான். பின்னர் அருகிலிருந்தவர் சிறுவனுடம் உனக்கு என்ன மிகவும் பிடிக்கும் என்று கேட்கவே விஜயை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளான்.

Dinathanthi

மேலும் விஜய்யின் படங்கள் பாடல்கள் என அனைத்தையும் மிகவும் ஆர்வமாக கூறியுள்ளான். அதையடுத்து அவர் தனது மொபைலில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தைப் போட்டுக் காண்பித்துள்ளார். சிறுவனும் படத்தை ஆர்வமாக படத்தைப் பார்த்த போது அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். 

Most Popular

Recent Comments