V4UMEDIA
HomeNewsBollywoodபிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார் : சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார் : சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!

பிரபல பாலிவுட் நடிகரும், தாதா சாஹேப் பால்கே விருதை பெற்றவருமான நடிகர் திலீப் குமார் (வயது 98) உடல் நலக் குறைவால் காலமானார்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திலீப் குமாரின் உயிர் இன்று பிரிந்தது.

1922-இல் பாகிஸ்தானின் பெஷாவரில் பிறந்த திலீப்குமார் இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994-இல் பெற்றவர். இவரது இயற்பெயர் முகமது யூசப்கான்.

நடிகர் திலீப்குமார், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 1944-இல் திரையுலகில் கால் பதித்த திலீப் குமார் 65-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மொகல்-இ-ஆசம், தேவதாஸ், மதுமதி உட்பட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருக்கிறார் திலீப்குமார்.

Most Popular

Recent Comments