Home News இயக்குநர் ஷங்கரை சென்னையில் சந்தித்த நடிகர் ராம் சரண்!

இயக்குநர் ஷங்கரை சென்னையில் சந்தித்த நடிகர் ராம் சரண்!

இயக்குனர் ஷங்கர் உடனடியாக தனது அடுத்த படமான ராம் சரண் நடிக்க உள்ள தெலுங்குப் படத்திற்கான பேச்சு வார்த்தையை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.

படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகும் 50வது படமான இதை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப் பிறகு ராம் சரண் நடிக்கும் படம் என்பதால் படத்திற்கான வியாபாரமும் பெரிதாகவே இருக்கும் என்பதே அதற்குக் காரணம்.

தமன் இசையமைக்கவும் வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில்  இயக்குநர் ஷங்கரை நடிகர் ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் சென்னையில் சந்தித்து பட விவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் .

விரைவில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.