V4UMEDIA
HomeNewsMollywoodமீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி

மீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த படம் திரிஷ்யம். தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர். திரிஷ்யம் 3வது பாகத்துக்கான ஐடியாவும் தனக்கு இருப்பதாக ஜீத்து ஜோசப் கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி இணையவுள்ளது. திரிஷ்யம் படத்தின் அடுத்த பாகமாக அல்லாமல், புதிய திரில்லர் கதையில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார்.

உடனடியாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது மோகன்லாலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Most Popular

Recent Comments