இயக்குனரும் .நடிகருமான சுப்ரமணியம் சிவா இப்படத்தை இயக்கியுள்ளார் . ஆத்மியா, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார் ..இப்படத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசையமைத்துள்ளார். விஷ்ணுரங்கசாமி ஒளிப்பதிவுசெய்துள்ளார்.இப்படத்தின் டிரைலர், பாடல் வீடியோ ஏற்கனவே இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன
சமுத்திரக்கனி இயக்குனரும் நடிகருமாவார் சமூக அக்கறை கொண்ட வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்கியும் நடித்தும் வருகிறார். இவர் இயக்கிய நாடோடிகள் திரைப்படம் பல விருதுகளை இவருக்கு பெற்றுத்தந்தது. அதே போல போராளி , நிமிர்ந்து நில், அப்பா போன்ற படங்கள் சமூக பிரச்சினைகளை பேசும் படங்களாக இருந்தன
வெள்ளையானை, தலைவி, எம்.ஜி.ஆர்.மகன், இந்தியன்2,டான், அந்ததூன் ஆகிய படங்களிலும், பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திலும், ஆகாசவானி என்ற தெலுங்கு திரைப்படத்திலும், 2 Days என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்துவருகிறார். கிட்டத்தட்ட 10 திரைப்படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் சமுத்திரக்கனி
விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இன்றைய வாழ்வில் விவசாயம் எவ்வளவுஅழிந்து வருகின்றது என்பதை உணர்ந்தும் கதை தான் இந்த வெள்ளை யானை. இப்படத்திலிருந்து கடந்த ஆண்டு வெளியான வெண்ணிலாபாடல் வீடியோ அனைவரின் பாராட்டை பெற்றது.
தற்போது ஜூலை 11 மதியம் 3 மணிக்கு வெள்ளையானை திரைப்படம் நேரடியாக சன் டிவி தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .